To Advertise Contact - christmusicindia@gmail.com

Sugam | சுகம்

Loading

சுகம் தரவேண்டும் யெகோவா ரஃப்பா – இன்று
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் (2)

நிமிரமுடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
நிரந்தரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர்

தொழுநோய்கள் சுகமானதே
உம்திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமது வல்லமையால்

பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS