Thadukki Vizhunthorai | தடுக்கி விழுந்தோரை

Loading

தடுக்கி விழுந்தோரை தங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்

தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை

போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இறக்கம் மிகுந்தவரே
உன் நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே

உம்மை நோக்கி மன்றாடும், யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர்

உயிரினங்கள் எல்லாம், உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்

அன்பு கூறும் எங்களை அரவணைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்

உம் அரசின் மகிமை, மாட்சிதனை
அறிவித்து மகிழ்ந்திடுவேன்
உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே
தியானித்து துதித்திடுவேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS