To Advertise Contact - christmusicindia@gmail.com

Thaedungal Kandadaiveer | தேடுங்கள் கண்டடைவீர்

Loading

பல்லவி
தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே

சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் – எந்த
சேதமும் வந்தணுகாமல்
இந்தப் புது தினம் கண்டடைய
தந்தனரே, தமது கிருபை – தேடுங்கள்

நல்ல சுகம் பெலன் தந்து – தம்
வல்ல நல ஆவியும் ஈந்து
வெல்ல பிசாசை ஜெயமெடுத்து
சொல்லதம் அன்பென்னிலே பொழிந்தார் – தேடுங்கள்

ஊண் உடை தந்தா தரித்து – இந்த
ஊழிய பாதையில் காத்து
கூப்பிடும் வேளை செவி கொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே – தேடுங்கள்

ஜீவனும், உள்ள நாளெல்லாம் என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசையா ஏசுவை ஸ்தோத்தரிப்போம் – தேடுங்கள்

காலையில் தோத்திர கீதம் – இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகள் செய்துழைப்பேன் – தேடுங்கள்

கர்த்தரை நான் எப்பொழுதும் – என்
கண்முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுவதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதையுங் காட்டிடுவார் – தேடுங்கள்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS