To Advertise Contact - christmusicindia@gmail.com

Thanneergal | தண்ணீர்கள்

Loading

தண்ணீர்கள் கடக்கும் போது என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகிறீர்
மூழ்கிப் போவதில்லை – நான்
எரிந்து போவதில்லை

என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா

உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் (ள்) நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
நன்றி ஐயா, நன்றி ஐயா

பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
பாடி மகிழச் செய்தீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா

பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
நன்றி ஐயா, நன்றி ஐயா

என்னை படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா

என்னை மீட்கும்படி
தன்னை பலியாக்கினீர்
எனக்குள் வந்து விட்டீரே
(என்னை) ஆட்கொண்டு நடத்திச் செல்வீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS