Thesame | தேசமே

Loading

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து களி கூறு
சேனையின் கர்த்தர் உன் நடுவில்
பெரிய காரியம் செய்திடுவார்

செழிப்பான புதுவாழ்வு
தேவனே அருளிடுவார்
சுகவாழ்வு சமாதானம்
சந்தோஷம் தந்திடுவார் (2)

மலைபோல வருவதெல்லாம்
பனிபோல் மறைந்திடுமே
உன்னதரின் கிருபைகளும்
உந்தனைச் சூழ்ந்திடுமே (2)

தேவனுடன் உறவு கொண்டு
தினம் தினம் வாழ்ந்திடுவாய்
இம்மையிலும் மறுமையிலும்
இன்பத்தை ருசித்திடுவாய் (2)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS