To Advertise Contact - christmusicindia@gmail.com

Thollai Kashdangal | தொல்லை கஷ்டங்கள்

Loading

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையிலே
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு – 3
காத்திடுவார் என்றுமே

ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
ஆவி குறைந்ததால்
மீட்பர் உத்திர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்

என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கை விட்டாலும் பின் செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவு அன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் அவர்
என்னைக் கைவிடமாட்டார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS