To Advertise Contact - christmusicindia@gmail.com

Thooya Devanai Thuthiththiduvom | தூய தேவனை துதித்திடுவோம்

Loading

தூய தேவனை துதித்திடுவோம்
நேயமாய் நம்மை நடத்தினாரே
ஓயாப்புகழுடன் கீதம் பாடித் தினம்
போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா

கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
கனிவுடன் நம்மை நடத்தினாரே
நம் கால்களை கன்மலையின் மேல்
நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் – தூய

யோர்தானைப் போல் வந்த துன்பங்களை
இயேசுவின் பலன் கொண்டு கடந்து வந்தோம்
அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே
பரிசுத்த பாதையில் நடந்திடுவோம் – தூய

கழுகுக்குச் சமமாய் நம் வயது
திரும்பவும் வாழ வயதாகும்
புது நன்மையால் புது பெலத்தால்
நிரப்பியே நம் வாயும் திருப்தியாகும் – தூய

தாவீதுக் கருளின மாகிருபை
தாசராம் நமக்குமே தந்திடுவார்
எலிசாவைப் போல் இருமடங்கு
வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார் – தூய

நலமுடன் நம்மை இதுவரையும்
கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே
கண்மணிபோல் கடைசி வரை
காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS