To Advertise Contact - christmusicindia@gmail.com

Thoththiram Paadiye Potriduven | தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

Loading

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தாங்கும் அன்பே – தோத்திரம்

ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்ய மதுர அன்பே – தோத்திரம்

மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னை கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே – தோத்திரம்

ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமான தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே – தோத்திரம்

வாக்கு மாறாத அன்பே – நித்தம்
வார்த்தையுரைத் தென்னை தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே – தோத்திரம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS