Thuthi Gana Magimaikku | துதி கன மகிமைக்கு

Loading

துதி கன மகிமைக்கு பாத்திரர்
உம்மை அனுதினம் துதித்திடுவேன்
அன்பே உந்தன் ஆசிகளை எண்ணவே
ஆனந்தமே என்னில் பொங்குதே

சரணங்கள்
நாடித்தேடி ஓடி உம் பாதம் வந்தேன்
நன்மை செய்யும் தேவன் நீரல்லோ
பாச வலையில் என்னை வீசி அணைத்தீர்
நேசா உமக்கென்ன செய்குவேன் – துதி

பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை
தேடி வந்த தேவன் நீரல்லோ
தூக்கி எடுத்தீர் தூய ஆவியும் ஈந்தீர்
தேவா என்னை சொந்தமாக்கினீர் – துதி

என்றும் உம்மோடு சீயோன் மலையில்
நிற்பதும் என் பாக்கியமல்லோ
ஆசையுடனே பூவில் காத்து நிற்கிறேன்
ஆருயிரே வேகம் வாருமே – துதி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS