To Advertise Contact - christmusicindia@gmail.com

Thuthi Ganam Magimai | துதி கனம் மகிமை

Loading

துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு இராஜாவுக்கே

தூதர்களே துதியுங்கள்
தூத சேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் – துதி

வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவைகளே துதியுங்கள் – துதி

அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள் – துதி

வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள் – நம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம் – துதி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS