Thuthi Thuthi Iyesuvai | துதி துதி இயேசுவை

Loading

துதி துதி இயேசுவைத் துதி துதி
துதிகளின் தேவனைத் துதி துதி
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் வல்லமீட்பர்
சேனைகளின் கர்த்தர் மகாராஜா அந்த
ராஜாவுக்குப்பிள்ளை நீ துதி துதி

பாவங்களை மன்னித்தாரே துதி துதி
சாபங்களை தள்ளினாரே துதி துதி
ரோகங்களைத் தீர்த்தவரைத் துதி துதி
இனிய ராகங்களைத் தந்தார் பாடித் துதி துதி

சோதனையில் தாங்கினாரே துதி துதி
வேதனையில் தேற்றினாரே துதி துதி
வியாதியை நீக்கியவரைத் துதி துதி
உந்தன் வியாகுலத்தை தீர்த்தவரைத் துதி துதி

காலை மாலை எப்பொழுதும் துதி துதி
எந்த காலத்திலும் நேரத்திலும் துதி துதி
ஜீவனைக் கொடுத்தவரைத் துதி துதி
என்றும் ஜீவனோடிருப்பவரை துதி துதி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS