To Advertise Contact - christmusicindia@gmail.com

Thuthi Thuthi | துதி துதி

Loading

துதி துதி என் மனமே
துதிகளின் உன்னதனை
தூத கணங்கள் வாழ்த்தி புகழ்ந்திடுமே
வானவர் இயேசுவின் நாமமதே

பாவமாம் காரிருள் மூடிடும் வேளை
இரட்சிக்க தீபமாய் வந்தார்
அற்புதமாய் நம்மை நடந்திடும் இயேசு
அன்பரின் காயங்கள் கண்டே

கல்வாரியில் அன்று சிந்தின இரத்தம்
கழுவிடும் பாவங்களை
கண்ணீரைத் துடைக்கும் அவரது அன்பு
கல்மனம் கரைந்திடுமே

சீக்கிரமாய் இதோ வருகிறேன் என்றவர்
சீக்கிரம் வந்திடுவார்
உன்னத தேவனின் மகிமையைக் காண
உள்ளமும் ஏங்கிடுதே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS