Thuthi Umakke Iyesu Naathaa | துதி உமக்கே இயேசு நாதா

பல்லவி
துதி உமக்கே இயேசு நாதா
வாழ்த்திடுவோம் உமையே

அனுபல்லவி
நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே
எண்ணியே துதித்திடுவோம்

ஆதி அந்தமில்லா அனாதி தேவனே
அடைக்க்கலாமாநீர் எமக்கு நீரே
மாறா விஸ்வாசத்தை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

கடந்த நாளெல்லாம் வழுவாமல்
காருண்யத்தாலே காத்தீரே
வல்ல தேவனே உம் வாக்குகளையே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

தாயினும் மேலாய் அன்புகூர்ந்தீர்
தந்தை போல் எமை சுமந்தீரே
ஜீவனைத் தந்த உம் அன்பினையே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

ஜெயம் பெற்றோராய் சேவை செய்து
ஜீவனை வைத்தே துதித்திடவே
நித்திய ஜீவனை எமக்குத் தந்தீரே
எண்ணியே துதித்திடுவோம் – துதி

உன்னதர் உந்தன் மகிமையைக் காண
சீயோனை எமக்குக் காட்டினீரே
இயேசுவே உந்தன் வருகையின் நாளை
எண்ணியே துதித்திடுவோம் – துதி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS