To Advertise Contact - christmusicindia@gmail.com

Thuthippom Allelooyaa | துதிப்போம் அல்லேலூயா

Loading

துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை
அல்லேலூயா

சரணங்கள்
தேவன் நன்மை வந்தடையச் செய்தார்
தம்மை யென்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வவல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம்

அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம்

தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாக நின்றே
விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம்

கூப்பிடும் வேளைகளிலே என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம்

பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒருபோதும் வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் – துதிப்போம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS