To Advertise Contact - christmusicindia@gmail.com

Thuthiththiduvom Endrum | துதித்திடுவோம் என்றும்

Loading

துதித்திடுவோம் என்றும் துதித்திடுவோம்
எந்நாளும் இயேசுவைத் துதித்திடுவோம்

அவர் அற்புதர் என்றும் செய்தவர்
அவர் அற்புதம் இன்றும் செய்கிறார்
அவர் அற்புதம் இனியும் செய்திடுவார்

அன்று யோர்தான் பிரிந்தது உண்மை
அற்புத வழியும் வந்தது உண்மை
அழைப்பில் அற்புதம் கண்டேன்
அதில் எந்நாளும் மகிழ்ச்சி கொண்டேன் – துதித்திடுவோம்

இன்று அற்புதம் நடத்திடும் வழியில்
கிருபை பொழிந்திடும் அற்புத இயேசு
உயர்வை அவரில் கண்டேன்
என்றும் நிறைவை வாழ்வில் கொண்டேன் – துதித்திடுவோம்

அற்புதம் செய்திடும் எங்கள் இயேசு
எந்நாளும் எங்கும் சோர்ந்ததே இல்லை
கண்ணால் அவரைக் கண்டேன்
நான் எந்நாளும் மேன்மை கொண்டேன் – துதித்திடுவோம்

என்றும் எங்கள் இயேசுதேவன்
அற்புதம் நிச்சயம் என்றுமே செய்வார்
ஆசீர் அவரில் கண்டேன்
என்றும் ஆனந்தம் வாழ்வில் கொண்டேன் – துதித்திடுவோம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS