உடைந்த பாத்திரம் நான்
எதற்கும் உதவாதவன்
உருக்குலைந்த பாத்திரம் நான்
எவரும் விரும்பாதவன்
குயவன் கையில் பிசையும் களிமண்போல -2
என் சித்தமல்ல உம் சித்தம்போலாக்கும் -2
1.இந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உந்தன் விருப்பப்படி என்னை மாற்றுமமே
என் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
2.என்னை அறிந்த மனிதன் மறந்து போகலாம்
உங்க கிருபை என்மேல் என்றும் இருக்குமே
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்