Udalaik Kodu | உடலைக் கொடு

உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்

இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்

ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு

நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும் வென்றிடு

தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்

விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்

நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS