Ulagin Oliye Iyesuve | உலகின் ஒளியே இயேசுவே

உலகின் ஒளியே இயேசுவே
அகிலம் போற்றும் தெய்வமாம்
அன்பின் தெய்வம் வேறுஇல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்

பல்லவி
இயேசு நல்லவரே
இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்

பாவம் போக்க வந்தவர்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய் – இயேசு

பாவங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை – இயேசு

தேவ மைந்தனாய் வந்தவர்
மாலும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS