Ularntha Elumbugal | உலர்ந்த எலும்புகள்

Loading

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்

அசைவாடும் – இன்று
அசைவாடும் ஆவியான தேவா

நரம்புகள் உருவாகட்டும் – உம்
சிந்தை உண்டாகட்டும்                     – அசைவாடும்

சதைகள் உண்டாகட்டும் – உம்
வசனம் உணவாகட்டும்

தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே

காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே

சேனைகளாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே

மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே

சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே

பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே

நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS