Ullamellaam Uruguthaiyo | உள்ளமெல்லாம் உருகுதையோ

உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொள்ளடங்கா நேசத்தாலே உன்
சொந்தமாக்கிக் கொண்டீரே

எந்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே

மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளொன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏக்க மெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் ஏசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ? – உள்ளமெல்லாம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS