Um Naamam Paadanumae | உம் நாமம் பாடணுமே

உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப் போல் வாழணுமே

ஒவ்வொரு நாளும் உம் திருபாதம்
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே

இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே

பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
பிரசங்கம் பண்ணணுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS