Um Naamam Sollach Solla | உம் நாமம் சொல்லச் சொல்ல

உம் நாமம் சொல்லச் சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா

மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமோ?
இந்த உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உமக்கது ஈடாகுமோ… ஆ … ஆ…

பால் என்பேன் தேன் என்பேன்
தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்ன என்பேன்
மறை என்பேன் நிறை என்பேன்
நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்ன என்பேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS