Ummaal Andri Ennaal | உம்மால் அன்றி என்னால்

உம்மால் அன்றி என்னால் ஆகும்
என்று சொல்ல ஒன்றுமில்லை
கொடியானது என்றும் தனியே
கனி தராது என்று சொன்னீரே
செடியே உம்மில் நிலைத்திருந்து நான்
கனிகள் தந்து என் வாழ்வை முடிப்பேன்

பெலனுமல்ல, பராக்கிரமும் அல்ல
உமதாவியால்தான் ஆகணும் தேவா
இரங்கும் தேவா உம்மால் அன்றி
எந்தன் விருப்பமும் ஓட்டமும் வீணே
சிறுவன் கை ஐந்தப்பம் இரு மீன்கள் உண்டு
எடுத்தாசீர்வதித்து அளித்திடும் தேவா

யுத்தம் எனதல்ல கர்த்த ரின் யுத்தம்
சும்மா நின்று நான் பார்த்திடச் செய்யும்
சத்துரு வெள்ளம்போல் எழும்பிடும் வேளை
கர்த்தரின் ஆவியே கொடியேற்றுவீரே
எந்தன் நாமூலம் பேசும் இயேசுவே
எங்களை இரத்தத்தில் வைத்திடும் ஆமென்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS