Ummaalae Naan Oru | உம்மாலே நான் ஒரு

Loading

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் – 2
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்

எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்

மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்

பெலத்தால் இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே

நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே

இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்

கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்

இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்

அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS