Ummai Ninaikkum | உம்மை நினைக்கும்

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா…..
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா

தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா

பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டு பிடித்தீர்…
கண்ணின் மணிபோல் காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்…

பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அனைத்துக் கொண்டீர்….
பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்

இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி – என்
கண்ணீர் துடைக்கின்றீர்

உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்

சிநேகம் பெற்றேன் ஐயா
கனம் பெற்றேன் ஐயா
உந்தன் பார்வைக்கு அருமையானேன்
உம் ஸ்தானாதிபதியானேன்

உலக மகிமையெல்லாம்
உமக்கு ஈடாகுமோ
வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்
உம் வார்த்தையோ ஒழியாதையா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS