To Advertise Contact - christmusicindia@gmail.com

Ummunnae | உம்முன்னே

Loading

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே

என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறுயில்லை

என்னை காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை

எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே

எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்தும் நீரே – ஆராதனை

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் – ஆராதனை

என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்

என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது – ஆராதனை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS