To Advertise Contact - christmusicindia@gmail.com

Unakkaay Mariththaen | உனக்காய் மரித்தேன்

Loading

உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
உயிரோடெழுந்தேன் இதோ
ஜீவிக்கிரேன் என்றாரே – இயேசு (2)

அனுபல்லவி
சீயோனே! கெம்பீரி! சாலமே! நீ ஸ்தோத்தரி
துதியே கணமே மகிமை செலுத்து! (2)
என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா (2)

வாக்கு மாறாதவரே – இயேசு
சொல் தவறாதவரே
சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே – சீயோனே

சுத்த திருச்சபையே பறை
சாற்றிடு நற்செய்தியை
சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் – சீயோனே

பாலகர் வாயினிலே – துதி
பாடல்கள் முழங்குதே
போற்றிப் பாடும் வாயை அடக்கக் கூடாதே – சீயோனே

தள்ளினோம் ஆகாதென்றே – ஆனார்
தலைக்கு மூலைக்கல்லாய்
ஸ்திரமாய் கர்த்தர் மேல் வாழ்க்கையைக் கட்டுவோம் – சீயோனே

அன்றாடகம் என்னுடன் – பேசி
அன்பாய் விசாரிக்கின்றார்
என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே – சீயோனே

நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ
நல்ல மார்க்கமிதுவே
நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் – சீயோனே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS