Unakkoruvar Irukkiraar | உனக்கொருவர் இருக்கிறார்

உனக்கொருவர் இருக்கிறார் உன்னை விசாரிக்க துடிக்கிறார்
உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங்கையில் வரைந்திருக்கிறார் – உனக்கொருவர்

ஜாதி ஜனம் மறைந்திட்டாலும் மறந்திடாதவர்
ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் – 2
சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன்விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை (உனக்கொருவர்)

ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உன்னை தள்ளிவிடுவாரோ – 2
தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர்
அஞ்சிடாதே மகனே மகளே என்று உன்னை தேற்றிடவே (உனக்கொருவர்)

வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளை சொல்லி புண்படுத்துவார்கள் – 2
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய் – 2
வாழத்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே (உனக்கொருவர்)

கஷ்டப்படும்போது நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்டபோது அது தீர்பாரில்லை
இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிட்டு பாத்தாச்சு
நம்ம கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை
உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று சொல்வதெல்லாம் சும்மாங்க
இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் போக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க (உனக்கொருவர்)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS