Unakullae Irukkindra | உனக்குள்ளே இருக்கின்ற

உனக்குள்ளே இருக்கின்ற உன்
இயேசு என்றும் பெரியவரே
நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதர் உனக்குள் இருகின்றார்
அதிசயம் செய்வார் நீ கலங்காதே
அதிசயம் செய்வார் நீ கலங்காதே (உனக்குள்ளே)

சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே (உனக்குள்ளே)

மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே (உனக்குள்ளே)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS