சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மை உள்ளவர் என்பது அவர் அடையாளம்-2
அவர் சொல்லும்போது எப்படி நடக்குன்னு
யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
எவருக்கும் புரியாது-2
உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர்-2
1.போகும்போது யாக்கோபாக ஓடினேன்
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன்-2
பாதை முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
கிருபை விலகல…
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
சற்றும் சருக்கல-2-உண்மை
2.அவரை விட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம்-2
நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
சம்பந்தம் கிடையாது
அவர் உண்மை எனக்கு செய்ததை சொல்ல
வார்த்தைகள் கிடையாது-2-உண்மை
உண்மை உள்ளவரே
சொன்னதை செய்பவரே-2
தருவேன் என்றதை
முழுவதும் தந்தீரே-2
தானனா தானனா தானனனானனா
என்னைப்போல் ஒருவனுக்கும் உண்மை உள்ளவரே
தானனா தானனா தானனனானனா
மாறிடுவேன் என்றறிந்தும் எனக்காய் நின்றவரே

