Unnaiyae Vaeruththuvittaal | உன்னையே வெறுத்துவிட்டால்

உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

சிலுவை சுமப்பதனால்
சிந்தையே மாறி விடும்
நீடிய பொறுமை வரும்
நிரந்தர அமைதி வரும்

பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே

நாளைய தினம் குறித்து
கலங்காதே மகனே (மகளே)
இதுவரை காத்த தெய்வம்
இனியும் நடத்திடுவார்

சேர்த்து வைக்காதே
திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே
குறைவின்றி காத்திடுவார்

தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS