To Advertise Contact - christmusicindia@gmail.com

Unnatha Devanae | உன்னத தேவனே

Loading

உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட என் உள்ளம்
ஏங்குதையா

உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன்
உம்மாக மாறிட
உலகை மறக்கின்றேன்

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா

தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே

பேரின்பக் கடலிலே
ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும்
தூயோனாய் வாழணும்

மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
உம் முக சாயலாய்
உரு மாற்றும் தெய்வமே

கொடியாக படரணும்
உந்தன் நேசமே
மடிமீது தவழணும்
மழலைக் குழந்தை நான்

ஐயா உம் நிழலிலே
ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம்
ஆரோக்கியம் அதிசயம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS