உன்னதத்தில்.. உயர உள்ள இயேசுவே ..
உம்மை கணத்துடன்… நாங்கள் இங்கு ஆராதிக்க …கூடி உள்ளோம் – 2
நீர் மகிமைக்கும், கணத்திற்கும்.. பாத்திரர்.
உம் மகிமையை, எவருக்கும், விட்டுக்கொடுக்காதவர்.
1.ஆலயம்.. செல்வதே.. உயிர் மீட்சியை தந்திடுதே
உம் வார்த்தையை .. கேட்டிட.. உள்ளம் வாஞ்சித்துக் கதறுதே
ஆலயம் செல்வது மகிழ்ச்சியைத் தந்திடுதே
உம் வார்தையைக் கேட்டிட மனம் வாஞ்சித்துக் கதறுதே
கடந்த இரவில் கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரே நன்றி
புதிய நாளை காணச் செய்து கிருபை தந்தீரே நன்றி – நீர்..
2. ஒவ்வொரு, ஆத்துமாவும், உந்தன் கரத்தின் ஈவுகள்
உம் முகத்தை நாங்கள் பார்க்கையில் உம் மகிமை அழகாய் விளங்குதே
ஒவ்வொரு, ஆத்துமாவும், உந்தன் கரத்தின் பொக்கிஷங்கள்.
உம் முகத்தை நாங்கள் பார்க்கையில் உம் மகிமை என்றும் விளங்குதே
என் வாயின் வார்த்தை, எண்ணம் யாவும், உமக்கு பிரியமாய் மாறும்
உம் சித்தம் அறிந்து, உமக்காய் ஓட, புதிய பெலனை என்னில் தாரும் –
நீர் மகிமைக்கும், கணத்திற்கும்.. பாத்திரர்.
உம் மகிமையை, எவருக்கும், விட்டுக்கொடுக்காதவர்.
உன்னதத்தில்.. உயர உள்ள இயேசுவே ..
உம்மை கணத்துடன்… நாங்கள் இங்கு ஆராதிக்க …கூடி உள்ளோம் – 2
நீர் மகிமைக்கும், கணத்திற்கும்.. பாத்திரர்.
உம் மகிமையை, எவருக்கும், விட்டுக் கொடுத்திட மாட்டீரே