To Advertise Contact - christmusicindia@gmail.com

Unnathaththin Aaviyai | உன்னதத்தின் ஆவியை

Loading

உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்றவேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே

பெந்தகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்

ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS