To Advertise Contact - christmusicindia@gmail.com

Urakkam Thelivom | உறக்கம் தெளிவோம்

Loading

பல்லவி
உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரி தொனிதான்
மழைமாரி பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்

அசுத்தம் களைவோம்
அன்பை அழைப்போம்
ஆவியில் அனாலும் கொள்வோம்
நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம் – உறக்கம்

அச்சம் தவிர்ப்போம்
தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்த சாட்சிகள்
நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடிவோம் – உறக்கம்

கிறிஸ்துவுக்காய்
இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய்
கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப் பட்டதில்லை – உறக்கம்

உயிர் பெறுவீர்
ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா
ஒருவர் உங்கள்
நடுவில் வந்து விட்டார் – உறக்கம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS