Uthavi Varum Kanmalai | உதவி வரும் கன்மலை

Loading

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை
நான் பார்க்கின்றேன்

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ரவேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார்    –  உதவி

கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார்                  – உதவி

கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காக்கின்றார்
அவர் எனது ஆத்துமாவை
அநுதினம் காத்திடுவார்        – உதவி

போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காத்திடுவார்        – உதவி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS