To Advertise Contact - christmusicindia@gmail.com

Uththamamaay Mun Sella | உத்தமமாய் முன் செல்ல

Loading

உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக் கொள்ள உதவும் (2)

பல விதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்னி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2)

தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக் கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக்காக்க வழிவகுத்தருள வேண்டும் (2)

இவ்வுலகமான மாயாபுரி அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதிநித்தியம் (2)

தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழி காட்டியே (2)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS