To Advertise Contact - christmusicindia@gmail.com

Vaan Pugazh Valla | வான் புகழ் வல்ல

Loading

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கர்மத்தின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

சரணங்கள்
யாக்கோபின் ஏணியின் முன்நின்றவர்தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
தோத்திரம் போல் பாதுகாத்திடுவாரே – வான் புகழ்

பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீரதாநிஎளின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தன் சேனை கொண்டு காததிடுவாரே – வான் புகழ்

உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்தியா தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே – வான் புகழ்

சிறைச் சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சத்ருவின் எண்ணங்கள் சிதறுண்டுமாள
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே – வான் புகழ்

அழைத்தனரே தம் மகிமைகேன்றே எம்மை
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
வழுவவிடாமலே காத்திடும் தேவன்
மாசற்றோராய் காத்திடும் தேவன் – வான் புகழ்

மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாளன் வருள் வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் – வான் புகழ்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS