Vaanil Kaagalam Muzhangidave | வானில் காகளம் முழங்கிடவே

சரணங்கள்
வானில் காகளம் முழங்கிடவே
வாஞ்சையோடு பறந்திடுவோம்
இப்புவித் துன்பங்கள் மறைந்திடுமே
இயேசுவின் இராஜ்ஜியம் நெருங்கிடுதே

ஆ ஆமென் அல்லேலூயா
ஆமென் வாரும் இயேசுவே

கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்
கறைகள் திறைகள் அகற்றிடுவோம்
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம் – ஆ ஆமென்

மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
மகிபன் உரைத்த வாக்கின்படி
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார் – ஆ ஆமென்

பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
பாடுகள் பாதையில் ஏற்றதினால்
தியாகத்தின் மேன்மையைக் காத்துக் கொண்டோர்
அவர் போல் மாறியே பறந்திடுவார் – ஆ ஆமென்

மகிமையின் நாளும் நெருங்கிடுதே
மணவாளன் சத்தம் கேட்டிடுதே
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம் – ஆ ஆமென்

Close Menu
error: Content is protected !!