வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம்
ஒளி மங்கி இருளாச்சே
உத்தமனே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
காவலனே கருணை செய்வாய்
நான் இருப்பேன் நடுவில் என்றார்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் தருவாய்
உன்றன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமரப் பரிகரித்தே
பாக்கியம் அளித்தாண்டருள்வாய்