Vaarungal Vaarungal Vaarungal | வாருங்கள் வாருங்கள் வாருங்கள்

Loading

வாருங்கள் வாருங்கள் வாருங்கள்
தேவனை ஆராதிப்போம்
வானமும் பூமியும் படைத்த
இயேசுவை ஆராதிப்போம்

ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்
வானமும் பூமியும் படைத்த இயேசுவை ஆராதிப்போம்

வாக்குகள் மாறா வல்லவர் இயேசுவை ஆராதிப்போம்
வல்லமை மிக்கவர் நன்மைகள் செய்தார் ஆராதிப்போம்

தேசத்தை நெஞ்சில் மூட்டி விட்டாரே ஆராதிப்போம்
நெருங்கி சென்று நேசர் இயேசுவை ஆராதிப்போம்

பாவங்கள் எல்லாம் மன்னித்தாரையா ஆராதிப்போம்
பகைமை சிலுவையில் கொன்றாரையா ஆராதிப்போம்

புத்திர சுவீகார ஆவி அளித்தாரே ஆராதிப்போம்
புதிய சிருஷ்டி நமக்களித்தாரே ஆராதிப்போம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS