Vallamai Devan Nanmai | வல்லமை தேவன் நன்மை

வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி
வாக்குகள் மாறா கிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி
ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரி
ஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரி
அல்லேலூயா (8)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)

வனாந்திர பாதையில் வழியைக் காட்டினார் ஸ்தோத்தரி
வாதை நேரத்தில் வைத்தியரானார் ஸ்தோத்தரி

துன்பத்தின் நேரத்தில் இன்பமாய் வந்தார் ஸ்தோத்தரி
துயரத்தின் வேளையில் ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி

ஒத்தாசை அனுப்பும் பர்வதமானதால் ஸ்தோத்தரி
சகாயம் செய்யும் கண்மலையானதால் ஸ்தோத்தரி

இம்மானுவேலனை ஸ்தோத்தரி
எபினேசரையே ஸ்தோத்தரி

சோதனை நேரத்தில் ஜெயத்தை தந்தார் ஸ்தோத்தரி
சோர்பின் வேளையில் சத்துவம் தந்தார் ஸ்தோத்தரி

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS