வல்லமையின் ஆவியானவர் – என்னுள்
வந்து விட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை – ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
Power ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை
கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை Control பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத் தெருவா மனம் வீசுவேன்
மீட்புபெரும் அனைவருக்கும் – நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்
உலகத்திற்கு வெளிச்சம் நான்
இந்த ஊரெல்லாம் Torch அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் – நான்
எப்போதும் சுவை தருவேன்
கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர் – நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை
கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே – நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)