To Advertise Contact - christmusicindia@gmail.com

Vazhi Nadaththum Valla | வழி நடத்தும் வல்ல

Loading

வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்விலே நாயகனே
வாழ்வில் நாயகனே நம் தாழ்வில் நாயகனே

பரதேசப் பிரயாணிகளே நாம் வாழும் பாரினிலே
பரமானந்தத்தோடே செல்வோம்
பரமன் நாட்டினிற்கே – இயேசு
பரன் தம் வீட்டினிற்கே

போகும் வழியை காட்டி நல்ல போதனை செய்வார்
ஏகும் சுத்தர் மீது கண்கள்
இருத்தி நடத்துவார் – இயேசு
திருத்தி நடத்துவார்

அந்தகார சக்திகள் எம்மை அணுகிடாமலே
சொந்தமான தம் ஜனத்தை
சூழ்ந்து காப்பாரே – இயேசு
துணையாய் நிற்பாரே

வாதை நோய்கள் வன்துன்பங்கள் வருத்திய போதும்
பாதையில் நாம் சோர்ந்திடாமல்
பலப்படுத்திடுவார் – இயேசு
திடப்படுத்திடுவார்

காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடுவோம்
பாடானாலும் பாடி செல்வோம்
பரவசமுடனே – இயேசு
பரன் தான் நம்முடனே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS