வழியும் நீரே சத்தியம் நீரே
ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து
பாடிப் போற்றுவேன் – 2
ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவே – 2
குருடர் கண்களை பார்க்கச் செய்தது
நீர்தானையா
செவிடர் செவியை கேட்கச் செய்தது
நீர்தானையா
குஷ்டரோகியை குணமாக்கினீர்
நீர்தானையா
மரித்தோரை எழும்பச்செய்தவர்
நீர்தானையா
பாவ சாபம் நீங்கச் செய்தவர்
நீர்தானையா
கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர்
நீர்தானையா