To Advertise Contact - christmusicindia@gmail.com

Vedha Puththagame | வேத புத்தகமே

Loading

வேத புத்தகமே, வேத புத்தகமே (2)
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வமே நீயே(2) – வேத

போதைகளின் ஞானமே – பெரிய திரவியமே (2)
பாதைக்கு நல்தீபமே – பாக்கிர் விரும்புந்தேனே (2) – வேத

என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்
பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே – வேத

துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே – வேத

பன்னிரு மாதங்களும் – பரிந்துன்னலாம் உன்கனி
உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார் – வேத

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS