To Advertise Contact - christmusicindia@gmail.com

Vinmagimai Kanmun | விண்மகிமை கண்முன்

Loading

விண்மகிமை கண்முன் கண்டேன்
விண் மன்னன் ஏசென்னை அழைக்கின்றார்

அனுபல்லவி

மண்ணுலகின்பங்கள் மாயையல்லோ
வீணானதே மாறிடுதே
விண் ஜீவ கிரீடமோ என் சொந்தமே

மரண யோர்தான் புரண்டு வந்தால்
மாலுமி ஏசுவின் கப்பல் ஏறி
அக்கரையோரம் நான் சென்றிடுவேன்
அங்கே வரவேற்புக் காத்திருக்கும் – விண்மகிமை

பரதீசிலே பல காட்சிகள்
பார்த்துப் பரவசம் பொங்கிடுமே
கண்ணீர் கவலையும் அங்கில்லையே
கர்த்தரின் மார்பினில் சாய்ந்திடுவேன் – விண்மகிமை

ஜீவ ஜல நதி ஓடிடும்
ஜீவ தண்ணீரால் என் தாகம் தீருமே
கர்த்தரின் கை கோர்த்து நடந்திட
காத்து தவிக்கின்ற தென்னுள்ளமே – விண்மகிமை

புதிய கனி புசித்திடுவேன்
பூக்கள் நடுவே உலாவிடுவேன்
தூதர்கள் பக்தர்களோடு வாழும்
தூய பேரின்பத்தை நாடுகிறேன் – விண்மகிமை

நல்ல சுகம் ஆரோக்கியமும்
நல்லாசீர்வாதங்கள் அங்கே உண்டே
தேவ சமூக இளைப்பாறுதல்
தேவை அதை நாடி கண்டடைவேன் – விண்மகிமை

எத்தனையோ பிரதி பலன்கள்
உத்தம ஊழியர் பெற்றிடவே
ஓட்டம் ஜெயத்தொடு முடித்திடும்
ஒன்றே எனதாவல் ஏசு போதும் – விண்மகிமை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS