To Advertise Contact - christmusicindia@gmail.com

Vizhuguthu Vizhuguthu | விழுகுது விழுகுது

Loading

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை
எழும்புது எழும்புது இயேசுவின் படை
துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம்

யோசுவாவின் சந்ததி நாமே
தேசத்தை சுதந்தரிப்போமே
உடன்படிக்கை பெட்டி நம்மோடு
ஊர் ஊராய் வளம் வருவோமே – துதிப்போம்

கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
கர்த்தர் தந்திடுவாரே
எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாதென்று வாக்குரைத்தாரே

மோசேயோடு இருந்ததுபோல
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
தளபதியாய் முன் செல்கிறார்
தளர்ந்திடமல்பின் தொடர்வோம்

அச்சமின்றி துணித்து செல்வோமே
அறிக்கைசெய்து ஆர்ப்பரிப்போமே
கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
நிச்சயமாய் வெற்றி பெறுவோமே

தேசத்து எதிரிகளெல்லாம்
திகில் பிடித்து நடுங்குகின்றனர்
கர்த்தர் செய்யும் அற்புதங்களை
கேள்விப்பட்டு கலங்குகின்றனர்

செங்கடலை வற்றச் செய்தவர்
சீக்கிரத்தில் வெற்றி தருவார்
யோர்தானை நிற்கச செய்தவர் – நம்
பாரதத்தை ஆளுகை செய்வார்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS