To Advertise Contact - christmusicindia@gmail.com

Yaar Vendum | யார் வேண்டும்

Loading

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான ஆசை வெறுத்தேனையா

உம்மோடல்லாது வாழ்வது ஏன்
உம் உள்ளம் மகியாஹாது வாழ்வது ஏன்
மனம் போன வாழ்க்கை வாழ்க்கையல்ல
வாழ்வேனே என்றும் உமக்காக நான்

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாத நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக் கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

உற்றாரின் பாசம் உடன் வருமோ
மற்றோரின் நேசம் மாறாததோ
உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ
ஏனையா கேட்டீர் இக் கேள்வியை

என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் பாதம் சரணடைந்தேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS