Yaesu Raajaavae | ஏசு ராஜாவே

Loading

ஏசு ராஜாவே
ஏழை என் ஜெபம் கேளும்

ஏற்ற வேளையில் உன்னை
உயர்த்துவேன் என்றவர் நீரே – 2

உமது சத்தியத்தினிமித்தம்
உமது கிருபையின் நிமித்தம் – 2
உம் நாமத்திற்கே மகிமை
வரப்பண்ணும் எங்கள் பிதாவே – 2

தமக்குச் சித்தமான யாவும்
தவறாமல் செய்திடும் தேவா
தமக்குப் பயப்படுவோரை
தாங்கி ஆசீர்வதிப்பாரே

பரிசுத்தவான்களின் மரணம் – (உம்)
பார்வைக்கு அருமையுள்ளதே
பரிசுத்தமுள்ள பரனே
பரிசுத்த பாதையில் நடத்தும்

உண்மையாய் ஊழியம் செய்தால்
உத்தம பங்கை அளிப்பீர்
உம் வீட்டில் எங்கும் உண்மையாய்
உழைத்த மோசே போல் மாற்றும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS